திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாதம் தோறும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு லட்சக்கணக்காக பக்தர்கள் திருச்செந்தூர் கடற்கரையில் தங்கி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் இன்று (13.12.2024) காலை நிலவரப்படி காயல்பட்டினம் சுற்று வட்டார பகுதியில் 105 மில்லி மீட்டர் மற்றும் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதியில் 41 மில்லி மீட்டர் மழை பொழிவும் பதிவாகியுள்ளது.
மேலும் வானிலை ஆய்வு மையம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளதால் தொடர்ந்து கனமழை பெய்யும் சூழல் உள்ளது.
எனவே நாளை (14.12.2024) மற்றும் நாளை மறுநாள் (15.12.2024) பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவில் கடற்கரை பகுதிகளில் பக்தர்கள் தங்குவதை தவிர்க்குமாறு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுறுத்தப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment