நாகலாபுரம் புதிதாக 28 சி.சி.டி.வி கேமராக்கள் நிறுவிய வியாபாரிகள் நல சங்க தலைவர்கள் மற்றும் பசுவந்தனை பரணி தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனத்தினருக்கு பாராட்டு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 20 December 2024

நாகலாபுரம் புதிதாக 28 சி.சி.டி.வி கேமராக்கள் நிறுவிய வியாபாரிகள் நல சங்க தலைவர்கள் மற்றும் பசுவந்தனை பரணி தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனத்தினருக்கு பாராட்டு.

தூத்துக்குடி மாவட்டத்தில் பசுவந்தனை மற்றும் நாகலாபுரம் பகுதிகளில் குற்ற சம்பவங்களை நடக்காமல் தடுக்கும் பொருட்டு புதிதாக 28 சி.சி.டி.வி கேமராக்கள் நிறுவிய வியாபாரிகள் நல சங்க தலைவர்கள் மற்றும் பசுவந்தனை பரணி தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனத்தினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் சான்றிதழ் வழங்கி பாராட்டு.

தூத்துக்குடி, சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகலாபுரம் பகுதியில் குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டு நாகலாபுரம் வியாபாரிகள் நல சங்கம் சார்பாக 13 சிசிடிவி கேமராக்கள் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று பசுவந்தனை பகுதியில் பசுவந்தனை வியாபாரிகள் நலச் சங்கம், பசுவந்தனை ஐக்கிய வியாபாரிகள் சங்கம், பசுவந்தனை நாடார் சங்கம் மற்றும் விட்டிலாபுரம் பரணி பாதுகாப்பு சேவை (Bharani security services) நிறுவனம் ஆகியோர் இணைந்து அப்பகுதியில் புதியதாக 12 சிசிடிவி கேமராக்கள் புதிதாக நிறுவியுள்ளனர்.

வியாபாரிகள் நல சங்கத்தினர் மற்றும் தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனத்தினர் ஆகியோர் இணைந்து தங்கள் பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டு காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து மொத்தம் 28 சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளனர். 

இச்செயலைப் பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று (20.12.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் மேற்படி பசுவந்தனை, நாகலாபுரம் வியாபாரிகள் நல சங்கத்தினர் மற்றும் பரணி பாதுகாப்பு சேவை நிறுவனத்தினர் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

No comments:

Post a Comment

Post Top Ad