குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் 18 நிரந்தர உண்டியல் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலில் உள்ள இந்த 18 நிரந்தர உண்டியல்களும் மாதம்தோறும் எண்ணப்படும். இந்த நிலையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி முதல் இந்த மாதம் டிச.19 ஆம் தேதி வரையிலான உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி நடந்தது.
இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூபாய் 17 லட்சத்து 24 ஆயிரத்து 148 ரூபாய் ரொக்கமாக வருவாய் வந்துள்ளது. மேலும் தங்கம் 55 கிராமும், வெள்ளி 300 கிராம் 600 மில்லி மற்றும் 3 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளது.
சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் துணை ஆணையர்/ செயல் அலுவலர் கோமதி, சாத்தான்குளம் ஆய்வாளர் முத்து மாரியம்மாள், கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம், அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர் கணேசன் ஆகியோர்கள் முன்னிலையில் கோவில் பணியாளர்கள் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
No comments:
Post a Comment