272ம் பிறந்த நாள் விழா அமைச்சர் கீதாஜீவன் நலதிட்ட உதவி வழங்கினார்.
தூத்துக்குடியில் தேர்மாறனின் 272ம் பிறந்த நாள் விழா, நூல்கள் வெளியீடு, மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல் என முப்பெரும் விழா தெலசால் அருள் சகோதரர்களின் தேர்மாறன் வளாகத்தில் நடைபெற்றது.
வில்லியம் மஸ்கரனாஸ் தலைமை தாங்கினார். மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலை வகித்தார். ஸ்டார்வின் அடிகளார் தேர்மாறனின் கல்லறையை அர்ச்சித்து, ஆசியுரை வழங்கினார்.
தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு, தேர் மாறன் குறித்த செய்திகளைத் தமிழக அரசின் பார்வைக்குக் கொண்டு சென்று கல்வெட்டுகளை ஆராய்ந்து அவருக்கு உரிய மரியாதை செய்யப்படும், என்றார்.
இதில் காங்கிரஸ்மாநில துணைத்தலைவர் சண்முகம், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், குரூஸ் பர்னாந்திஸ் நற்பணி மன்ற தலைவர் ஹெர்மன் கில்டு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகளின் கட்சி மாவட்டச் செயலாளர் டிலைட்டா ரவி, ஆசிரியர் நெய்தல் ஆன்டோ, பிஜின் ஜார்ஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் டிலைட்டா ரவிக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
No comments:
Post a Comment