தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சி அமலிநகர் மீனவர் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கும் பணியில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த நவம்பர் 17ம் தேதியில் முதல் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் மணப்பாடு டிலைட்டா ரவி தலைமையில் நிர்வாகிகள், அமலிநகர் ஊர் நல கமிட்டி நிர்வாகிகளை சந்தித்து பேசினர். பின்னர் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் நடைபெறும் இடங்களை பார்வையிட்டனர்.
இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி ,தென்காசி மண்டல செயலாளர் முரசு தமிழப்பன் , நிர்வாக மறுசீரமைப்பு ஒருங்கிணைப்பு குழு மேலிட பொறுப்பாளர் வழக்கறிஞர் காயல் அகமது ஷாஹிப் , திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ஆ.சங்கத்தமிழன் , சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ்பரிதி, தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட துணை அமைப்பாளர் கோட்டை நந்தன்,
விவசாயப் பாதுகாப்பு இயக்க மாவட்ட துணை அமைப்பாளர் இளையராஜா , உடன்குடி ஒன்றிய பொருளாளர் டேவிட் ஜான்வளவன் , திருச்செந்தூர் ஒன்றிய துணை செயலாளர் கரம்பை ஆதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT..அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
No comments:
Post a Comment