தூத்துக்குடி மாவட்டத்தில் 18.12.2024 முதல் 27.12.2024 வரை தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு வார காலத்திற்கு ஆட்சிமொழிச் சட்ட வாரம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 5 December 2024

தூத்துக்குடி மாவட்டத்தில் 18.12.2024 முதல் 27.12.2024 வரை தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு வார காலத்திற்கு ஆட்சிமொழிச் சட்ட வாரம்

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 18.12.2024 முதல் 27.12.2024 வரை தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு வார காலத்திற்கு ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தகவல்

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 18.12.2024 முதல் 27.12.2024 வரை தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு வார காலத்திற்கு ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்பட உள்ளது. 

இந்த ஆண்டு 18.12.2024 முதல் 27.12.2024 வரை மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் முதலானவற்றில் ஆட்சிமொழிச் சட்ட வாரத்திற்கான ஒட்டுவில்லைகளை ஒட்டியும், துண்டறிக்கை மற்றும் அரசாணையினை வழங்கியும் கொண்டாடப்படவுள்ளது.  

அரசு அலுவலகங்களுக்கு கணினித் தமிழ், ஆட்சிமொழிச் சட்டம், வரலாறு, பிழையின்றி தமிழில் குறிப்புகள் வரைவுகள் எழுதுதல் குறித்து அரசுப் பணியாளர்களுக்கு பயிற்சியளித்தும், வணிக நிறுவன உரிமையாளர்களுடன் தமிழில் பெயர்ப்பலகைகள் வைப்பது தொடர்பான கூட்டம் நடத்தியும், 

ஆட்சிமொழிச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணியில் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு ஆட்சிமொழிச் சட்ட வாரத்தினைச் சிறப்பாகக் கொண்டாட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad