இந்திய அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு 75 ஆண்டுகள் ஆனதையொட்டி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் இந்திய அரசமைப்பு சட்டத்தின் 75வது ஆண்டையொட்டி உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்செந்தூரில் அரசமைப்பு சட்ட நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் விடுதலை செழியன் தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
முன்னதாக சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தர்கா செய்தியாளர்.
No comments:
Post a Comment