வருவாய் ஆய்வாளர் பணியிடங்களுக்கு, இளநிலை மற்றும் முதுநிலை என, பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, அரசு அறிவிப்பு வெளியிட்டாலும், உயர் அதிகாரிகள் நிறைவேற்றாமல் காலதாமதம் செய்து வருகின்றனர்.
அரசு புதிய திட்டங்களை அறிவித்து வரும் நிலையில், புது பணியிடங்கள் ஏற்படுத்தப்படாததால், வருவாய் துறை அலுவலர்கள், கடுமையான பணிச்சுமையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கருணை அடிப்படையில், பணி நியமனங்களுக்கான இடங்கள் குறைக்கப்படுவதால், எதிர்காலத்தில் இந்த வாய்ப்பு இல்லாத நிலை ஏற்படும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து நிலை வருவாய் அலுவலர்களும், இன்று, பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் வருவாய்த் துறையினர் பணிகளைப் புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வருவாய் துறை பணிகள் பாதிக்கப்பட்டன.
தமிழ் குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
No comments:
Post a Comment