திருக்கல்யாண வைபவம் மொய் எழுதி பிரசாதம் பெற்ற பக்தர்கள்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த நவ. 2ம் தேதி தொடங்கியது.
முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் வியாழக்கிழமை மாலை கடற்கரையில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு, நேற்று திருக்கோயில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. காலை 6 மணிக்கு மேல் தெய்வானை அம்மன் தபசுக்கு புறப்பட்டு, தெற்குரதவீதி வழியாக தெப்பக்குளத்தெருவில் உள்ள திருக்கல்யாண தபசு மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு அம்மனுக்கு ஏராளமான பெண் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர்.
மாலையில் சுவாமி குமரவிடங்கப்பெருமான் மாப்பிள்ளை கோலத்தில் தனிச்சப்பரத்தில் எழுந்தருளி, புளியடித்தெரு, சபாபதிபுரம் தெரு, தெற்கு ரதவீதி வழியாக வந்து, தெப்பக்குளம் அருகே உள்ள திருக்கல்யாண தபசு மண்டபத்தில் உள்ள தெய்வானை அம்மனுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து தெற்குரதவீதி - மேலரதவீதி சந்திப்பில் வைத்து சுவாமி - அம்மன் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்து, சுவாமி-அம்மன் திருக்கோயில் சேர்ந்தனர்.
நள்ளிரவு திருக்கோயிலில் ராஜ கோபுர வாசலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் திருக்கல்யாண வைபவத்திற்கு மொய் எழுதி, பிரசாதம் பெற்றுச் சென்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன்உள்ளிட்ேடார் செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment