திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி பெரும் திருவிழாவினை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் குவிந்திருந்தனர். அப்போது வெளியூரிலிருந்து வந்திருந்த பெண்மணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்த திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரம் கடற்கரையில் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியையும் தாண்டி சென்று அந்தப் பெண்மணிக்கு தேவையான முதல் உதவி சிகிச்சைக்கு டாக்டர்களை உடனடியாக வரவழைத்து சிகிச்சை அளித்தார்.
தக்க சமயத்தில் முதல் உதவி சிகிச்சை அளித்து அந்தப் பெண்மணியின் உயிரை காப்பாற்றிய திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரத்தை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
No comments:
Post a Comment