கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயக்குமார் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியர் (பயிற்சி) சத்யா கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
மேலும் இவ்விழாவில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலர் து. நீகர் பிரின்ஸ் கிப்ட்சன். தாத்துக்குடி - நாசரேத் திருமண்டல உப தலைவர் அருட்திரு. வி.எம்.எஸ் தமிழ் செல்வன, கல்லூரியின் நிர்வாக அதிகாரி முனைவர் எஸ். விவோதா ஆகியோர் விழாவில் பட்டம் பெற்ற மாணவ மாணவிகளை வாழ்த்தி பேசினார்கள்,
நிகழ்ச்சியில் திருமண்டல நிர்வாகஸ்தர்கள் குருத்துச் செயலாளர் அருட்திரு முனைவர் எம்.பி. இம்மானுவேல் வான்ஸ்டக். திருமண்டல உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் மேலாளர் திரு எஸ். பிரேம்குமார் ராஜாசிங், வழக்கறிஞர் எல். ரகுராமன் மற்றும் பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் வழிகாட்டுதலின்படி முதல்வர், நிர்வாக அதிகாரி, துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்
No comments:
Post a Comment