ஸ்ரீவைகுண்டம் நவ. 14..தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவதிருப்பதி களில் 4 வது திவ்யதேசமான தொலைவில்லி மங்கலம் சுவாமி அரவிந்தலோச்சனர் கோவிலில் பிரம்மோற்சவ த்தை முன்னிட்டு இன்று நவ.13, கொடியேற்றம் நடந்தது. ஐப்பசி மாதத்தில் ரேவதி நட்சத்திரத்தில் துவங்கி 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்.
அதனை முன்னிட்டு காலை 7 மணிக்கு விஸ்வரூபம். 7.00 மணிக்கு மூலவர் திருமஞ்சனம். 8.00.மணிக்கு உற்சவர் செந்தாமரை கண்ணன் தாயார்களுடன்குறட்டிற்கு எழுந்தருளி சிறப்பு திருமஞ்சனம். 9 மணிக்கு அலங்காரம். 9.20 மணிக்கு தீபாராதனை. 9.50 மணிக்கு கொடிப்பட்டம் சுற்றி வந்தது. 10.25 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. 11.30 மணிக்கு நாலாயிர திவ்ய பிரபந்த சாத்துமுறை. 12..30 மணிக்கு தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மாலை 4.30 மணிக்கு சாயரட்சை. 5.30 மணிக்கு சுவாமி செந்தாமரை கண்ணன் இந்திர விமான வாகனத்தில் எழுந்தருளி அலங்கரிக்கப்பட்டு மாட வீதி சுற்றி வந்து 6.30 மணிக்கு இறங்கினார். தினசரி மாலை மணிக்கு சிம்ம, அனுமன், சேஷ, யானை, சந்திரபிரபைவாகனங்களில் புறப்பாடு நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் ஆத்தான் கீழத்திருமாளிகை ராமானுஜ ஸ்வாமி. கோவில் அர்ச்சகர்கள் ரகு சுந்தர ராஜன் ஸ்தலத்தார்கள் ஸ்ரீதரன். சந்தானம் வாசு. நிர்வாக அதிகாரி சதீஷ். அறங்காவலர் குழுத் தலைவர் கணேசன் என்ற ராமானுஜன்.
உறுப்பினர்கள் கிரிதரன் ராமலட்சுமி. செந்தில். காளிமுத்து ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரி ராஜப்பா வெங்கடாச்சாரி. சீனிவாச அறக்கட்டளை ஆலோசகர் விஜயகுமார். களப் பணியாளர்கள் பாலாஜி பத்மநாபன்.
உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment