முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் விளங்கி வருகிறது. இந்த கோயிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். கடலில் புனித நீராடியும், முடி காணிக்கை செலுத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். அண்மை காலமாக அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் திருச்செந்தூர் கோயிலுக்கு வருவது அதிகரித்து வருகிறது.
அதிமுக முன்னாள் பொதுச் செயலாளரான சசிகலா இன்று திருச்செந்தூர் வந்தார். அவர் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தார். அதே போல் திருச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பராமச் சாரிய சுவாமிகளும் திருச்செந்தூர் கோயிலில் தரிசனம் செய்தார். அவர்களுக்கு கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT..அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment