உடன்குடி, நாசரேத் பகுதிகளில் மாற்று வழித்தட பேருந்துகள் இயக்கம் - பயணிகள் குழப்பம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 14 November 2024

உடன்குடி, நாசரேத் பகுதிகளில் மாற்று வழித்தட பேருந்துகள் இயக்கம் - பயணிகள் குழப்பம்.

உடன்குடி, நவ.14. திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாசரேத் வழியாக உடன்குடிக்கு 137 வழித்தட எண் கொண்ட அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வழித்தட எண் 137 கொண்ட உடன்குடிக்கு செல்லும் அரசு பேருந்து ஆனது மாற்று வழித்தடத்தில், அதாவது ஸ்ரீவைகுண்டம் ஏரல் ஆத்தூர் பகுதிக்கு இயக்கப்பட்டு வருகிறது.

பேருந்தின் முன்புறமும், பின்புறமும், பக்கவாட்டிலும் உடன்குடி நாசரேத் ஸ்ரீவைகுண்டம் செய்துங்கநல்லூர் வி.எம் சத்திரம் என வழித்தடத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள் உள்ளது.

இதைக் கண்டு வழக்கம்போல் திருநெல்வேலி முதல் ஸ்ரீவைகுண்டம் வரை உள்ள பகுதிகளில் இருந்து பேருந்தில் ஏறும் பயணிகள், பேருந்தில் ஏறிய பின் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுவதை அறிந்தவுடன் பேருந்தில் இருந்து கீழே இறக்கி விடப்படுகின்றனர்.

இதே போல திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் வழித்தடத்தில் இயக்கப்படும் 134 வழித்தடம் என் கொண்ட அரசு பேருந்துக்கு பதிலாக மாற்று வழி தட பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. 
 
இதனால் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது, எனவே அரசு போக்குவரத்து துறை மேலாளர் கவனத்தில் கொண்டு அந்தந்த வழித்தட பேருந்துகளை, அதே வழித்தடத்தில் இயக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad