ஸ்ரீவைகுண்டம் நவ. 15. தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவதிருப்பதி களில் 1 வது திவ்யதேசமான ஸ்ரீவைகுண்டம் சுவாமி கள்ளப்பிரான் கோவிலில் அவதார திரு நட்சத்திர நாள் கருடசேவை நேற்று நடந்தது. உற்சவர் சுவாமி கள்ளப்பிரான் ஐப்பசி மாதத்தில் அசுவதி நட்சத்திரத்தில் அவதரித்தார்.
அதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கருடசேவை நடைபெறும். நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம். 8.30 மணிக்கு மூலவர் பால் திருமஞ்சனம். 9.30 மணிக்கு உற்சவர் கள்ளப்பிரான் தாயார்களுடன் சயனக்குறட்டிற்கு எழுந்தருளி சிறப்பு திருமஞ்சனம்.
10.30 மணிக்கு அலங்காரம். 11 மணிக்கு தீபாராதனை. 11.30 மணிக்கு நாலாயிர திவ்ய பிரபந்த சாத்துமுறை. 12..30 மணிக்கு தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சாயரட்சை. 6.30 மணிக்கு சுவாமி கள்ளப்பிரான் வாகன குறட்டிற்கு எழுந்தருளி கருட வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு மணிக்கு கருட வாகனத்தில் காட்சி தந்தார். உடன் கருட வாகனம் ரதவீதி சுற்றி வந்தது
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ். வாசு. நாராயணன். ராமானுஜம். சீனு. ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி. சீனிவாசன். தேவராஜன். அத்யாபகர்கள் சீனிவாசன் பார்த்தசாரதி. சீனிவாச தாத்தம். வைகுண்ட ராமன், அறங்காவலர் குழுத் தலைவர் அருணாதேவி கொம்பையா
உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம்.முருகன். முத்துகிருஷ்ணன். பாலகிருஷ்ணன். நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் நம்பி. உபதாரர் கிருஷ்ண மூர்த்தி குடும்பத்தினர் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment