நாசரேத், நவம்பர் -15, நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள், பூ செடிகள் மற்றும் அழகு தரும் சிறு செடிகள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை தாங்கினார். பசுமை படை பொறுப்பாசிரியர் அம்புரோஸ் முன்னிலை வகித்தார்.
பள்ளி நிர்வாக கட்டிடத்தின் முன் பகுதியை அழகுப்படுத்தும் விதமாக பூ செடிகளும், அழகு தரும் சிறிய மரக்கன்றுகளும் நீளவாக்கில் தொடர்ச்சியாக நடப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பசுமை படை மற்றும் பசுமை மன்றத்தின் மாணவர்களுக்கு, செடிகள் மற்றும் மரங்கள் வளர்ப்பதின் அவசியம் குறித்தும், பசுமையை காப்பது குறித்தும், இயற்கையை நேசிப்பது குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது.
மரக்கன்றுகளை நடுவதற்கான ஏற்பாடுகளை இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் ஜெய்சன் பாபு ஆகியோர் செய்திருந்தனர். ஒவ்வொரு பூ செடிக்கும் நீர் தொடர்ச்சியாக பாய்ச்சுவதற்கு ஏற்ற வகையில் சொட்டுநீர் பாசனமும் அமைக்கப்பட்டது. மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை பள்ளியின் தாளாளர் சுதாகர், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment