நாசரேத், நவ.15, உடையார்குளம் ஊராட்சி அடுத்த சின்ன மதி கூடல் கிராமத்தில் உள்ள குளம் தூர் வாருவதற்காக ரூ . 18 லட்சம் 25 ஆயிரம் ரூபாயும் அதே போல் வால சுப்பிரமணியபுரம் கிராமத்தில் உள்ள உதவியார் குளம் தூர்வாரும் பணிக்காக 14 லட்சம் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை மூலம் தூர் வாரும் பணி செய்து கொடுக்கப்பட்டது .
அதேபோல் இதற்கு அடுத்த சின்ன மதி கூடல் குளத்து கரையில் 886 பனை விதைகள் வெள்ளமடம் ஊராட்சி வால சுப்பிரமணியபுரம் கிராமத்தில் உள்ள குளத்துக்கரையில் 1050 பனை விதைகள் இந்த டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை மூலம் நடவு செய்யப்பட்டது,.
இந்நிகழ்வில் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளைகளின் இயக்குனர் நந்தகோபால் , திட்ட அலுவலர் கோபி , பொறியாளர் .முத்துகுமார் ராஜா , சமுதாய வளர்ச்சி அலுவலர் .சண்முகம் ,செல்வி சினேகா கிராம வளர்ச்சி அலுவலர் இசக்கிமுத்து மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா.
No comments:
Post a Comment