தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக மினி டைடல் பார்க், இன்டர்நேஷனல் பர்னிச்சர் பார்க், ரூ.300 கோடி மதிப்பீட்டில் திருச்செந்தூர் மாஸ்டர் பிளான். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 14 November 2024

தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக மினி டைடல் பார்க், இன்டர்நேஷனல் பர்னிச்சர் பார்க், ரூ.300 கோடி மதிப்பீட்டில் திருச்செந்தூர் மாஸ்டர் பிளான்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (14.11.2024) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அரசு துறைகளின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் தெரிவித்ததாவது.

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு தூத்துக்குடி மாவட்ட மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், இளைஞர்களுடைய வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தவும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றது. 

மினி டைடல் பார்க், இன்டர்நேஷனல் பர்னிச்சர் பார்க், பக்தர்களுடைய வசதிக்காகவும் கோயிலை சுற்றியுள்ள மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருச்செந்தூர் மாஸ்டர் பிளான் என பல்வேறு முன்னெடுப்புகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக செயல்படுத்தி வருகின்றார்கள். 

அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் சேவைகள் மக்களுக்கு விரைவாகவும், தரமாகவும் கிடைக்க செய்ய வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கின்றேன். இன்றைய தினம் 7,893 பயனாளிகள் பயனடைகின்ற வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் 206.47 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 

இந்த நலத்திட்டங்கள் பொதுமக்களை சென்றடைய பணியாற்றிய மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வரின் முகவரி, மக்களிடம் முதல்வர் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண அலுவலர்கள் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். 

இந்திய ஒன்றியத்திலேயே மருத்துவ கட்டமைப்புகளில் தமிழ்நாடு சிறந்து விளங்குகின்றது. மருத்துவ சேவைகள் முழுமையாக மக்களுக்கு கிடைக்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று துணை முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். 

No comments:

Post a Comment

Post Top Ad