தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள பண்டாரஞ்செட்டிவிளை மேரி ஆன் பெஸ்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் , கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிற்பபு மருத்துவ முகாம் இன்று நடந்தது. முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் சேது குற்றாலம் வரவேற்றார். பள்ளியின் தாளாளர் பிரபாகர், தலைமை ஆசிரியை சாரோனின் சுதா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
மெஞ்ஞானபுரம் வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் திட்ட விளக்கவுரையாற்றினார். உடன்குடி பேரூராட்சி தலைவர்ஹூமைரா ரமீஸ் பாத்திமா , உடன்குடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பாலசிங் ஆகியோர் தலைமை வகித்து பேசினார்.
முகாமில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு ரத்தத்தில் சர்க்கரை அளவு, உயர் ரத்த அழுத்தம், பார்வை குறைபாடு, தோல்நோய், உள்பட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்து கொண்டனர். அவர்களுக்கு மருத்துவ குழுவின் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர். முடிவில் மருத்துவரல்லா பணி மேற்பார்வையாளர் ஜான்ராஜா நன்றி கூறினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment