தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 17 November 2024

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தூத்துக்குடியில் நேற்று இரவு பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 6.30 வரை கடந்த 24 மணி நேரத்தில் 160.60 மிமீ மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினம் 42மிமீ மழை பெய்துள்ளது. 

மேலும் கோவில்பட்டி 24மிமீ, தூத்துக்குடி 18மிமீ, கழுகுமலை 13மிமீ, ஸ்ரீவைகுண்டம் 8.2மிமீ, திருச்செந்தூர் 4மிமீ, சாத்தான்குளம் 2மிமீ, கயத்தார் 6மிமீ, எட்டயபுரம் 11.40மிமீ, விளாத்திகுளம் 3மிமீ, வைப்பார் 7மிமீ, சூரங்குடி 10மிமீ மழை பதிவாகி உள்ளது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad