தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி சல்மா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை யை கண்டித்தும் சிபிஐ விசாரணை கோரியும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் உடன்குடியில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உடன்குடி ஒன்றிய பாஜக தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார். பாஜக பொதுச் செயலாளர் சிவ முருக ஆதித்தன், நாகர்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி, இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் விபி ஜெயக்குமார், மாவட்ட இளைஞர் அணி தலைவர் விக்னேஷ், மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் ஸ்டீபன் லோபோ, சேவா பாரதி மாவட்ட தலைவர் கிருஷ்ண மந்திரம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தூர்பாண்டி, ஒன்றிய பொதுச் செயலாளர் சின்னத்துரை, சிவக்குமார், ஒன்றிய துணைத் தலைவர் செல்வராஜ், பொருளாளர் சுகுமார், மாவட்ட மகளிர் அணி தலைவி மகாலட்சுமி, புஷ்பா, தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலூகா செய்தியாளர்.
No comments:
Post a Comment