தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் முதல் பரிசை பெற்று தூத்துக்குடி மாவட்ட அணியில் இடம் பிடித்து வெற்றிக்கு வழி வகுத்த திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் தங்க பிரபாகரன் அவர்களை நமது தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பாக பாராட்டி நினைவு பரிசு வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது
நிகழ்விற்கு தெற்கு மாவட்ட தலைவர் வேலாயுத பெருமாள் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஷேக் முகமது மாவட்ட செய்தி தொடர்பாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணைத்தலைவர் முரளி சங்கர், மாநில இணைச் செயலாளர் கணேஷ் குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மண்டல தலைவர் கோடீஸ்வரன் அவர்கள் பரிசு பெற்ற மாணவனுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.
விழாவில் தினமணி நாளிதழ் சார்பாக நடந்த பேச்சு போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும் பரிசு வழங்கி விழாவில் கௌரவிக்கப்பட்டது. முடிவில் மாவட்ட ஆலோசகர் வன்னியபெருமாள் நன்றியுரை கூறினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா.திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment