மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் பாராட்டு விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 22 October 2024

மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் பாராட்டு விழா.

மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் பாராட்டு விழா.

நாசரேத், அக்டோபர்-22, தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் நாசரேத் ஒ எம் சி ஏ இணைந்து நடத்திய தியாகி டிகே செல்லத்துரை நினைவு மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் பாராட்டுதல் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. தலைமையாசிரியர் குணசீலராஜ் மாணவர்களுக்கு பரிசு கோப்பைகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். 

17 வயது பிரிவில் ஜோஸ்வா சாம் துரை, ஜெஸ்வின் இம்மானுவேல், ஜஸ்டின் சாமுவேல், ஜெபஸ் ஜெரியேல் ஆகியோரும், 14 வயது பிரிவில் செல்வ விஷ்ணுவும் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 

நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம், இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், உடற்கல்வி ஆசிரியர்கள் தனபால் மற்றும் சுஜித் செல்வசுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் சுதாகர், சதுரங்க பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அலெக்சன் கிறிஸ்டோபர், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad