தூத்துக்குடியில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் ரயில் நிலைய பிட் லைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முத்துநகர் ரயில் வண்டியின் காலி பெட்டிகளுக்கு அடியில் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பெண் ஊழியர் சாந்தி (38) என்பவர் கையில் மின்சாரம் தாக்கியது.
இதில், அவரது வலது உள்ளங்கையிலிருந்து முழங்கை கை வரை காயம் ஏற்பட்டது. இதையடுத்து சக பணியாளர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
No comments:
Post a Comment