திருச்செந்தூரில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 23 October 2024

திருச்செந்தூரில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது.


திருச்செந்தூரில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது. 

திருச்செந்தூரில் சண்முகர் மஹாலில் வைத்து 14 வது தேசிய அளவிலான சிலம்பப் போட்டி உலக சிலம்பம் தற்காப்பு கலை சங்கம் சார்பாக நடைபெற்றது. 

 இந்த போட்டிக்கு சிறப்பு விருந்தினராக சென்னையில் இருந்து வருகை தந்த சினிமா பட நடிகர் மீசை ராஜேந்திரன் அவர்கள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துரை கூறினார். 

இந்த போட்டியில் தூத்துக்குடி சீலன்சுருதி நிறுவனர் மற்றும் இசையமைப்பாளர் சீலன், உலக சிலம்பம் தற்காப்பு கலை சங்க துணைத் தலைவர் விவின், துணைச் செயலாளர் ராஜமாதாங்கன், சிலம்ப மாஸ்டர் ராஜலிங்கம், தமிழரசன், உமாபதி, மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

 இந்த போட்டியை உலக சிலம்ப தற்காப்பு கலை சங்கம் தலைவர் கராத்தே டென்னிசன் ஏற்பாடு செய்திருந்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad