தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் 2 பேர் கைது! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 23 October 2024

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் 2 பேர் கைது!

தூத்துக்குடியில் கஞ்சா வைத்திருந்ததாக கல்லூரி மாணவர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி வடபாகம் போலீசார் அம்பேத்கர்நகர், முல்லை நகர் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு மோட்டார் பைக்கில் வந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் தூத்துக்குடி கோயில்பிள்ளை விளையை சேர்ந்த ஜேசுபாலன் மகன் தினேஷ் (36) மற்றும் ஒரு கல்லூரி மாணவர் என்பதும் தெரியவந்தது. 

அவர்கள் மோட்டார் சைக்கிளில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்து கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்: சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad