முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாமின் 93 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக மாணவர் இயக்கம் சார்பில் திருச்செந்தூர் தெய்வ கல்யாண மஹாலில் ஐம்பெரும் விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது..
கலாம் 93 வது பிறந்தநாள் விழா,பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா,நலத்திட்டங்கள் வழங்கும் விழா, அப்துல்கலாம் விருதுகள் வழங்கும் விழா,1000 பனை விதைகள் நடும் விழா நடந்தது.
தமிழக மாணவர் இயக்கத்தின் மாநில அமைப்பாளர் செ.அஜித்குமார், இயக்க மாநில தலைமை வழக்கறிஞர் பெ.பிரகாஷ்
தலைமை வகித்தனர். மாநில பொருளாளர் திருப்பதி விஜி, தென் மண்டல அமைப்பாளர் அமுதா மெஸ் சி. பட்டு, திருச்செந்தூர் தொகுதி செயலாளர் ப.ஜெயக்குமார் ,தென் மண்டல துணைச் செயலாளர் பால்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர்
செ.மதன்ராஜ் வரவேற்றார்.
திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம் , நகராட்சி துணைத்தலைவர் செங்குழி ஏ .பி. ரமேஷ் , அரசு தலைமை மருத்துவர் பாவநாச குமார், காவல் ஆய்வாளர் கனகராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் , அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோடீஸ்வரன், கலாம் வியாபாரி சங்க தலைவர் தர்மராஜா ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். எழுத்தாளர் நெல்லை கவிநேசன்
சிறப்புரையாற்றினார். அனைத்து வியாபாரிகள் சங்கம் செயலாளர் கார்க்கி, மக்கள் நீதி மய்யம் கணேஷ் குமார் வாழ்த்தி பேசினர்.
விழாவில் தூய்மை பணியாளர்கள். சமூக ஆர்வலர்கள், மருத்துவ பணியாளர்கள், கடல் பாதுகாப்பு குழுவினருக்கு, மருத்துவ அவசர ஊர்தி பணியாளருக்கு கலாம் விருது, பேச்சு, ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது.
ஏழை பெண்களுக்கு தையல் மிஷின்கள், திருச்செந்தூர் அரசு மனநல காப்பகத்தில் உள்ளவர்களுக்கு புத்தாடைகள், தூய்மை பணியாளர்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது. முடிவில் மாநிலச் செயலாளர் சிவனேசன் நன்றி கூறினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment