செயல்படாத கல் குவாரியில் வெள்ள நீர் சேமிக்க ஆட்சியர் ஆய்வு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 22 October 2024

செயல்படாத கல் குவாரியில் வெள்ள நீர் சேமிக்க ஆட்சியர் ஆய்வு.

செயல்படாத கல் குவாரியில் வெள்ள நீர் சேமிக்க ஆட்சியர் ஆய்வு.

தூத்துக்குடி அருகே கோரம்பள்ளம் கண்மாய் வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாக உப்பாத்து ஓடையில் வரக்கூடிய வெள்ள நீரை மடைமாற்றம் செய்து செயல்படாத கல்குவாரிகளில் சேமிப்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் இன்று(22.10.2024) தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், மேலத்தட்டப்பாறை ஊராட்சிப் பகுதியில் உள்ள செயல்படாத கல்குவாரிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 


இந்த ஆய்வின் போது, செயற்பொறியாளர்(திட்ட வடிவமைப்புக் கோட்டம், திருநெல்வேலி) திருமதி.மகேஸ்வரி, உதவி செயற்பொறியாளர்கள் திரு.சுபாஷ், திரு.ஸ்ரீராம் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad