தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த மாணவன் தங்க பிரபா முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டியில் மாநில அளவில் சாம்பியன் பட்டம் வென்ற தூத்துக்குடி அணியில் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதில் மாணவன் தங்கபிரபாவுக்கு பாராட்டு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. உடற்கல்வி ஆசிரியர் தாமஸ் வரவேற்றார். திருச்செந்தூர் நகராட்சி துணைத்தலைவர் ஏ பி. ரமேஷ் மாணவன் தங்கபிரபாவை பாராட்டி வெகுமதி வழங்கினார்.
மேலும் நீண்ட காலமாக சீரமைக்கப்படாமல் இருந்த மைதானத்தை சீரமைக்கும் பணியை ஏ. பி. ரமேஷ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ஜெசி பொன்ராணி மாணவன் தங்கபிரபாவை பாராட்டி ஸ்போர்ட்ஸ் ஷூ பரிசு வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட அறங்காவலர் வாள் சுடலை, தோப்பூர் சுரேஷ் , பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆனந்த ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் லிங்கராஜன் நன்றி கூறினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
No comments:
Post a Comment