தூத்துக்குடி அஞ்சலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம்: பொதுமக்கள் பயன்பெற அழைப்பு! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 29 October 2024

தூத்துக்குடி அஞ்சலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம்: பொதுமக்கள் பயன்பெற அழைப்பு!

தூத்துக்குடி அஞ்சலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம்: பொதுமக்கள் பயன்பெற அழைப்பு!

இது தாெடர்பாக தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தூத்துக்குடி கோட்டத்தில், அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் திருச்செந்தூர் ரோட்டில் அமைந்துள்ள தூத்துக்குடி அஞ்சல் ஊழியர் குடியிருப்பு வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. மதுரை / திருநெல்வேலியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் சென்று செய்து வந்த சான்றிதழ் சரி பார்ப்பு பணி தற்போது தூத்துக்குடி அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்திலும் செய்யப்படுகிறது.

மேலும் தற்போது தூத்துக்குடி கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவகலங்களிலும் CSC என்ற சேவை மூலம், புதியதாக பாஸ்போர்ட் விண்ணப்பித்தல் மற்றும் பாஸ்போர்ட் புதுப்பித்தல் போன்றவற்றிக்கு online லில் விண்ணப்பித்து appoinment பெற்று தரப்படும். விண்ணப்பிக்கும் போதே சேவைக்குரிய கட்டணத்தை செலுத்தி விட வேண்டும். (Passport fee- Rs. 1500/- சேவைக்கட்டணம் Rs.100/-) விண்ணப்பித்த பின் எந்த தேதியில் சேவை மையத்தை அணுக வேண்டும் என்கிற விபரம் தெரிவிக்கப்படும். 

அந்த குறிப்பிட்ட தேதியில் உரிய ஆவணங்களுடன் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்தை அணுகி தங்களுடைய சேவையை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறாக பொது மக்கள் அனைவரும் பாஸ்போர்ட் சேவை மையம் மூலமாக பாஸ்போர்ட் பதிவு மற்றும் புதுப்பிக்கும் திட்டத்தினை உபயோகித்து பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad