தூத்துக்குடி மாவட்டம், அற்புத நகர் அடைக்கலாபுரத்தில் உள்ள அதிசய ஆரோக்கிய அன்னை திருத்தல ஆண்டு பெருவிழா கடந்த கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் செபமாலை பிரார்த்தனை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெற்று வந்தது. 9 ம் நாள் திருவிழாவான ஞாயிற்றுக்கிழமை காலை பெருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து காலை 11 மணிக்கு திருமுழுக்கு மறையுரை நடந்தது. மாலை 7:00 மணிக்கு திருவிழா மாலை ஆராதனை நடந்தது. உடன்குடி பேரருட் தந்தை பன்னீர்செல்வம், மங்களகிரி அருட்தந்தை விஜயன் ஆகியோர் தலைமை வைத்து மறைவுரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து இரவு 11.00 மணிக்கு ஆரோக்கிய அன்னையின் சப்பரபவனி நடைபெற்றது. இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலி நடைபெற்றது.தொடர்ந்து இரவு கொடி இறக்கம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அருட் தந்தை லாசர் மற்றும் பங்கு இறை மக்கள், திருவிழா குழுவினர் அருள் சகோதரிகள், பங்கு மேய்ப்பு பணி குழுவினர் செய்துள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment