ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் நவராத்திரி திருவிழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 7 October 2024

ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் நவராத்திரி திருவிழா.


ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் நவராத்திரி திருவிழா. 

ஸ்ரீவைகுண்டம் அக். 8.. 
நவதிருப்பதி களில் முதல் திருப்பதியான ஸ்ரீவைகுண்டம் ஸ்வாமி கள்ளப்பிரான் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம். 

இந்த ஆண்டும் கடந்த 5 நாட்கள் வைகுண்ட நாயகி தாயாருடனும் இன்று முதல் நான்கு நாட்கள் சோரநாதநாயகியுடன் திருவிழா நடைபெறுகிறது. நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம் மணிக்கு 8 திருமஞ்சனம். 10 மணிக்கு நித்திய ல் கோஷ்டி நடந்தது. 

மாலை 6 மணிக்கு சாயரட்சை 6.30 மணிக்கு சுவாமி கள்ளப்பிரான் வைகுண்ட நாயகி தாயாருடன் சயன குறட்டில் எழுந்தருளி சேர்வை. 7.00 மணிக்கு தீபாராதனை. 7.30 மணிக்கு நாலாயிர திவ்ய பிரபந்த பாடல் படித்தனர். 8 15 மணிக்கு சாத்துமுறை. தீர்த்தம். சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ். வாசு. நாராயணன். ராமானுஜன். சீனு. ஸ்தலத்தார்கள். ராஜப்பா வெங்கடாச்சாரி. சீனிவாசன். தேவராஜன். அறங்காவலர் குழுத் தலைவர் அருணாதேவி கொம்பையா உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம் முருகன் முத்துகிருஷ்ணன் பாலகிருஷ்ணன். 

நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் நம்பி. அத்யாபகர்கள் சீனிவாசன். பார்த்த சாரதி. சீனிவாசதாத்தம் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad