கழுகுமலை- இரும்பு கம்பிகளை திருடிய வாலிபர் கைது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 8 October 2024

கழுகுமலை- இரும்பு கம்பிகளை திருடிய வாலிபர் கைது.

இரும்பு கம்பிகளை திருடிய வாலிபர் கைது!!

கழுகுமலையில் கட்டுமான பணிக்காக வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள இரும்பு கம்பிகளை திருடியவரை போலீசார் கைது செய்தனர். 
 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் வேலுச்சாமி (24). இவர் கட்டுமான பணிக்காக தனது வீட்டின் முன்பு வைத்திருந்த ரூ.1லட்சம் மதிப்புள்ள 60 கிலோ இரும்பு கம்பிகள் திருடு போய்விட்டதாம். 

இதுகுறித்து அவர் கழுகுமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் மாடசாமி மகன் வெற்றிவேல் முருகன் (40), என்பவர் இரும்புக் கம்பிகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, இரும்பு கம்பிகளை பறிமுதல் செய்தனர். 

 -தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad