அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க வீட்டு வரி, மின்சார வரி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உடன்குடி நகர அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் இன்று நடந்தது.
நகர செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மனித சங்கிலி போராட்டத்தில் உடன்குடி ஒன்றிய செயலாளர் தாமோதரன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் அமிர்தா எஸ் மகேந்திரன், தலைமை கழக பேச்சாளர் இன்பகரன் பொன் ஸ்ரீராம், ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் சேர்மத்துரை, நகர பொருளாளர் மணிராஜ், ஒன்றிய கவுன்சிலர் முருங்கை மகாராஜன், செட்டியா பத்து பஞ்சாயத்து துணை தலைவர் செல்வகுமார், வெங்கட் ராமானுஜபுரம் பஞ்சாயத்து துணைத்தலைவர் ராஜ்குமார்,
ஒன்றிய இளைஞர் அணி பொருளாளர் செட்டியாபத்து ராம்குமார், மாவட்ட இளைஞரணி முன்னாள் தலைவர் குணசேகரன், மகளிர் அணி செயலாளர் சகிலா, ஒன்றிய அவைத் தலைவர் தாவீது ஜெயராமன், கிளைக் கழகச் செயலாளர் முத்து குமார், கிருஷ்ணகுமார் ,நகர வர்த்தக அணி சித்திரை லிங்கம், கிறிஸ்டியாநகரம் ராஜ்குமார், குலசை சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழர் குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment