ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் துறை அசோசியேசன் துவக்க விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Friday, 18 October 2024

ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் துறை அசோசியேசன் துவக்க விழா.

ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் துறையின் மாணவர்களுக்கான அசோசியேசன் துவக்க விழா இன்று நடைபெற்றது. 

கல்லூரி தாளாளரும் திருமண்டல செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் ஜெயக்குமார் ரூபன் தலைமை தாங்கினார்.
எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் துறையின் பாடகர் குழுவினர் பாடல் பாடினர். இறுதியாண்டு மாணவி ஜெஸ்லின் வேத பாடம் வாசித்தார். திருமண்டல பெண் ஆயர் ராணி அம்மா  ஆரம்ப ஜெபத்துடன் வழி நடத்தினார். துறையின் தலைவி ஆக்னஸ் பிரேமா மேரி  வரவேற்புரை ஆற்றினார். 

கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயக்குமார் துவக்க உரையாற்றினார். நிர்வாக அதிகாரி வினோதா கலந்து கொண்டார். மாணவ மாணவியருக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்று அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

கல்லூரியின் தாளாளர் ஜெயக்குமார் ரூபன் மாணவர்களின் நலனுக்கான நல்ல ஆலோசனைகளை வழங்கி, கல்லூரியின் சிறப்புகளை எடுத்துக் கூறி சிறப்பு உரையாற்றினார்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக துறையின் பேராசிரியர்கள் ஆசிரியர்கள் அலுவலர்கள் மாணவ மாணவியர் செய்திருந்தனர். 

நிறைவாக துறையின் பேராசிரியர் ஸ்டான்லி நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.

தமிழர் குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா.

No comments:

Post a Comment

Post Top Ad