முகவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எல்ஐசி நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
எல்ஐசி முகவர்களின் லியாபி சங்கத்தின் தென்மண்டல மற்றும் கோட்ட சங்கத்தின் அறிவிப்பின்படி முகவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எல்ஐசி நிறுவனத்தை கண்டித்து நேற்று வெள்ளி கிழமை திருச்செந்தூர் கிளை முன்பாக வளாகத்தில் வைத்து வாயிற்கூட்டம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் திருச்செந்தூர் கிளையின் லியாபி தலைவர் சுடலைமுத்து தலைமை வகித்து ஆர்ப்பாட்டம் துவக்கினார்
பொருளாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.அதைத் தொடர்ந்து எல்ஐசியால் பாலிசிதார்க்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் முகவர்களுக்கு கமிஷன் குறைப்பு.ஆகிய பிரச்சனைகளை பற்றி முகவர்களுக்கு விளக்கினார் அதைத் தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்து ஜிந்தாபாத் என முழக்கம் விட்டனர் இதில் ஏராளமான முகவர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் தலைவர் சுடலைமுத்து நன்றி கூற ஆர்ப்பாட்டம் நிறைவுபெற்றது.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
No comments:
Post a Comment