குலசை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுக்கான தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 3 October 2024

குலசை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுக்கான தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள பிரசித்தி பெற்ற குலசை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுக்கான தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

வேத மந்திரங்கள் முழங்க கோவில் முன் உள்ள கொடி மரத்தில் காலை 9.30 மணிக்கு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு வகை யான அபிஷேகம் நடந்தது. அப்போது 'ஓம் காளி ஜெய் காளி' என்று கோஷமிட்டு பக்தர்கள் வழிபட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர் குழுதலைவர் கண்ணன், உறுப்பினர் கணேசன் மற்றும் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கொடியேற்றத்தை தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டினர். விரதம் மேற்கொண்டிருக்கும் பக்தர்கள் இன்று முதல் காளி, அம்மன், குரங்கு, குறவன் குறத்தி, அனுமார், போலீஸ், குரங்கு, கரடி, சிங்கம்,புலி உள்ளிட்டபல்வேறு வேடங்களை அணிய தொடங்கியுள்ளனர். 

10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று
பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 

சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் வரும் 12ம் தேதி நள்ளிரவு நடைபெறுகிறது. அன்று அம்பாள் மகிஷாசுரமர்த்தினி கோலம் கொண்டு கடற்கரையில் அமைந்திருக்கும் சிதம்பரேஸ்வரர் கோவில் வளாகத்தை நோக்கி அம்மன் புறப்பாடு நடைபெறும். 

அங்கு மகிஷாசுரவதம் நடைபெறும். கொடியேற்றத்தையொட்டி மாவட்ட எஸ்பி அல்பர்ட்ஜான் மேற்பார்வையில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா.
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad