தூத்துக்குடி 5வது புத்தகத் திருவிழா - அமைச்சர்கள் திறந்து வைத்து பார்வை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 3 October 2024

தூத்துக்குடி 5வது புத்தகத் திருவிழா - அமைச்சர்கள் திறந்து வைத்து பார்வை.

தூத்துக்குடி மாவட்டம், சங்கரப்பேரி திடலில் மாவட்டம் நிர்வாகம் சார்பில் நடத்தும் தூத்துக்குடி 5வது புத்தகத் திருவிழாவினை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் ஆகியோர் இன்று (03.10.2024) திறந்து வைத்து பார்வையிட்டனர். 

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தெரிவித்ததாவது:-
புத்தக்கத் திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் 500000 க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள். 66 கோடி ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் விற்பனையாகின்றன. புதிய படைப்பாளிகளை கொண்டாடும் வகையில் புத்தகத்திருவிழா 2024 ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விழா புத்தகத் திருவிழாவுடன் அமைந்தில்லாமல் இயற்கையோடு அமைந்திருக்கிறது. ஐரோப்பாவில் அச்சடிக்கப்பட்ட முதல் நூல் தமிழில் தான் வெளியிடப்பட்டது. 1554ஆம் ஆண்டு போர்ச்சுக்கல் நாடு லெஸ்பென்ட் நகரம் காற்றில்லா எனும் நூலை தமிழிலே வெளியிட்டது.

தமிழ் நூல் வெளிவருவதற்கு காரணம் மூன்று பேர். 1. வின்சென் நாசரேத் 2.ஜோர்க்கே கார்வெல்லோ 3.குரூஸ் ஆகிய மூன்று பேரும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள். புன்னக்காயலில் தான் முதல் அச்சுக்கூடம் 1586 ஹென்றிக்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது. அடியார் வரலாறு என்ற புத்தகம் முதன் முதலில் அச்சடிக்கப்பட்ட இடம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த புன்னக்காயல் கிராமம். வரலாற்றிலேயே புத்தகங்களுக்கான முதன்மை இடமாக தூத்துக்குடி மாவட்டம் விளங்குகிறது.
தொல்லியல் சிறப்புகளாக இருந்தாலும், இலக்கிய சிறப்புகளாக இருந்தாலும் தூத்துக்குடி மாவட்டமானது முதன்மை பெற்று விளங்குகிறது. இசை வானகர்களும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள். இளம் தலைமுறைகள் உணர்ந்து கொள்ளும் வகையில் இந்த புத்தக் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் ஒவ்வொரு காட்சிகளும் இயற்கை காட்சிகளாகும், மண்ணின் புவியியல் வளம், இயற்கை வளம், புள்ளினங்கள், விலங்கினங்கள், ஊர்வன அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பாக மிகச் சிறப்பாக இந்த புத்தகத் திருவிழா மற்றும்நெய்தல் கலை விழா உருவாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பேசியதாவது:-
 முதல் முதலில் கல்கத்தாவில் இந்தியன் அசோசியேசன் என்ற அமைப்பு ஆறிய மொழி குடும்பத்தை முன்னிலை படுத்தி சமஸ்கிரதம் படித்தால் தான் இந்தியாவை புரிந்து கொள்ள முடியும். சமஸ்கிருதம் இல்லையென்றால் இந்தியாவே கிடையாது. ஆரியம் தான் இந்தியா என்ற கருத்தை பரப்பி கொண்டிருந்த சமயத்தில் அதற்கு எதிராக முதல்முதலாக எழும்பிய குரல் தூத்துக்குடியிலிருந்து எழும்பிய திராவிட மொழி குடும்பம் என்று இருக்கிறது. 

அதை வலியுறுத்தி இன்று வரை நாம் விவாதித்து கொண்டிருக்கிறோம். இது தான் உண்மையென்பதை நிலை நாட்டிகொண்டிருக்கிறோம். அகழாய்வுகளில் எல்லாம் சொல்லக்கூடிய கருத்துகள், திராவிட மொழி குடும்பம் தான் எல்லாவற்றிற்கும் முதலாக வந்தது என்று, வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு ஆங்கில அதிகாரியோ திருக்குரல்னா என்ன என்று அதனுடைய பெருமையை பற்றி புரிந்து கொண்டு, இதை இயற்றிய திருவள்ளுவருடைய உருவ படத்தை முதல் முதலில் வரைய சொன்னது எல்துரை அவர்கள் தான். 

அவரும் திராவிட மொழி குடும்பத்துக்கு ஒரு தனித்துவம் இருக்கிறது என்பதை நிலை நாட்டி இருக்கிறார். ஆகவே திராவிட மொழி குடும்பத்தின் தனித்துவத்தை நாம் இன்று பேசிக்கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு முதலில் குரல் கொடுத்தது நம்ம தூத்துக்குடி மாவட்டம் தான் என்ற பெருமை நமக்கு இருக்கிறது. கதைகளாக இருந்தாலும் சரி, ஆராய்ச்சி கட்டுரைகளாக இருக்கட்டும், கட்டுரைகளாக இருக்கட்டும் எதுவாக இருந்தாலும் அதை புரிந்து கொள்வதற்கு நமக்கு மிகச்சிறந்த வழி புத்தகங்கள் மட்டும் தான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்கள்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது:- 
இந்த நிகழ்ச்சி 5-வது வருடமாக மிக சிறப்பாக தூத்துக்குடி மாவட்ட மக்களின் வசதிக்காகவும், வாசிப்பு பழக்கம் மாணவர்களிடையே ஏற்படுத்திவிட வேண்டும் என்று நம்முடைய ஆட்சித் தலைவர் முயற்சி எடுத்துள்ளார். அத்துணை மாணவர்களும் இந்த புத்தக திருவிழாவில் பங்கெடுத்திட வேண்டும். நீங்கள் சேமிக்கும் பழக்கத்தை உங்களிடையே உருவாக்க வேண்டும். 

சேமிப்பு தொகையிலிருந்து இந்த புத்தகத்தை வாங்கிட வேண்டும், அதை நீங்கள் படித்து பயன்பெற வேண்டும் என்று நம்முடைய மாணவர்களை ஊக்குவித்துள்ளார் நம் ஆட்சியர். 
சுதந்திர போராட்ட போருக்கு வித்தித்து ஆங்கிலேயர்களை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர். நம்முடைய மாவட்டத்தை சார்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன். அதே வழியில் மகாகவி பாரதியார், செக்கிலுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் என்று நாம் அடிக்கி கொண்டே போகலாம். சுதந்திரப் போராட்ட வீரர்கள் சுதந்திரப் போராட்ட தியாகிகள் தமிழகத்தில் அதிகம் வசிக்கக்கூடிய, வாழ்ந்த இடம் எது என்றால் அது தூத்துக்குடி மற்றும் ஈரோடு ஆகும். 

அதேபோல் சாகித்ய அகடமி விருது பெற்ற கி.ராஜநாராயணன் ஆக இருந்தாலும் சரி , பூமணி அவர்களாக இருந்தாலும் சரி, சாகித்ய அகடமி விருது பெற்ற இலக்கியவாதிகளும், அதிகம் புத்தகம் எழுதக்கூடிய எத்தனையோ எழுத்தாளர்கள் ,சொற்பொழிவாளர் வாழ்ந்து வரக்கூடிய, மற்றும் வாழக்கூடிய ஒரு மண் நம்முடைய தூத்துக்குடி மாவட்டம்.
 ஆகவே, இந்த ஒரு நிகழ்விலே எதிர்கால சமுதாய தலைவர்களாகக்கூடிய இளைஞர்கள், இளம் பெண்கள் இன்னும் அதிகமாக நாட்டுப்பற்றோடு இருக்க வேண்டும், தமிழ் மொழிப்பற்றோடு இருக்க வேண்டும். 

புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மறந்து வருகிற இளைஞர் சமுதாயத்துக்காகத்தான் முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றதில் இருந்த இந்த புத்தகத் திருவிழா என்பது அத்தனை மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. பெயரளவுக்கு அல்ல உண்மையிலே எல்லோரும் பயனடைய வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு இந்த புத்தகத் திருவிழா நல்ல முறையில் நடத்தப்பட்டு வருகிறது. 

  நம்முடைய பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுடைய முயற்சியோடு நெய்தல் நிகழ்ச்சி வருகின்ற 11, 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. 10-ம் தேதியிலிருந்து நபார்டு வங்கி மூலம் மகளிர் உற்பத்தி பொருட்களின் ஒரு பெரிய கண்காட்சி மற்றும் விற்பனைக்காக வைக்கப்பட உள்ளது. இந்த புத்தகத் திருவிழா அறிவாற்றலை வளர்த்து கொள்ள ஒரு நல்ல நிகழ்வாக அமையப்பட்டுள்ளது. நிச்சயமாக இங்கு வந்துள்ள ஒவ்வொருவரும் ஒரு புத்தகத்தை வாசிக்கின்றோம் என்றால் அந்த புத்தகத்தை எழுதிய எழுத்தாளருடைய அனுபவத்தை நாம் கற்றுக் கொள்கிறோம் என்று அர்த்தம் என மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததார்கள். 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சி.சண்முகையா (ஒட்டப்பிடாரம்), ஜி.வி.மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்);, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, உதவி ஆட்சியர்(பயிற்சி) சத்யா, பபாசி செயலாளர் முருகன் மற்றும் கல்லூரி மாணவ - மாணவிகள், அரசு அலுவலர்கள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad