தூத்துக்குடியில் புதிய துறைமுகம் வளாகத்தில் பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 4 October 2024

தூத்துக்குடியில் புதிய துறைமுகம் வளாகத்தில் பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் புதிய துறைமுகம் வளாகத்தில் பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி முத்தையாபுரம் சுந்தர் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி மகன் செல்வம் (39), இவர் புதிய துறைமுகத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வருகிறார். கடந்த 30 ஆம் தேதி தனது மோட்டார் பைக்கை புதிய துறைமுகம் கிரீன் கேட் அருகே நிறுத்தி இருந்தார். வேலை முடிந்து மீண்டும் வந்து பார்க்க போது பைக்கை காணவில்லை. இதன் மதிப்பு ரூ.40 ஆயிரம் ஆகும். 

இதுகுறித்து அவர் தெர்மல் நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், முத்தையாபுரம் சுந்தர் நகர் 2வது தெருவை சேர்ந்த அபூபக்கர் மகன் சேக் முகமது (22) என்பவர் பைக்கை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர். 

 தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad