சாலையில் நடந்து சென்ற முதியவர் பைக் மோதி பலி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 4 October 2024

சாலையில் நடந்து சென்ற முதியவர் பைக் மோதி பலி.

சாலையில் நடந்து சென்ற முதியவர் பைக் மோதி பலி

தூத்துக்குடியில் சாலையில் நடந்து சென்றபோது, பைக் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
 
தூத்துக்குடி முத்தம்மாள் காலனி 3வது தெருவைச் சேர்ந்தவர் தங்கசாமி மகன் செல்லப்பாண்டி (64). இவர் தூத்துக்குடி - எட்டையாபுரம் ரோட்டில் டி மார்ட் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த செல்லப்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) வின்சென்ட் அன்பரசி வழக்குப் பதிந்து, பைக்கை ஓட்டி வந்த வடக்கு சங்கரப்பேரியை சேர்ந்த நீதிராஜன் மகன் கருப்பசாமி (23) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

 தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad