மேலும் 5 நாட்கள் ரயில் ரத்து செய்யபடுகிறது. சீசன் டிக்கெட் எடுத்த பணம் வீணாகிறது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 3 October 2024

மேலும் 5 நாட்கள் ரயில் ரத்து செய்யபடுகிறது. சீசன் டிக்கெட் எடுத்த பணம் வீணாகிறது.

திருச்செந்தூர் - நெல்லை பயணிகள் ரயில் மேலும் 5 நாட்கள் ரத்து : தெற்கு ரயில்வே தகவல்
அக்டோபர் 3 தண்டவாளம் புதுப்பிக்கும் பணி காரணமாக திருச்செந்தூர் - நெல்லை பயணிகள் ரயில் 5 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "திருச்செந்தூர்-நெல்லை இடையே தினமும் பயணிகள் ரயில் (வண்டி எண் 06674/06409) இயக்கப்பட்டு வருகிறது. நெல்லையில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி காரணமாக இந்த ரயில் கடந்த செப்.12 முதல்  மூன்று அக்டோபர் 03 வரை, மூன்று வாரங்களாக நிறுத்தப்பட்டது. இதனிடையே நாளை அக்டோபர்  04 (வெள்ளிக்கிழமை) முதல் இயங்கும் என்ற நிலையில், மேலும் வருகிற 8-ந் தேதி வரை, கூடுதலாக 5 நாட்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் மேற்படி ரயிலில் தினசரி பயணம் செய்ய சீசன் டிக்கெட் எடுத்த பணம் வீணாகிறது என்று பயணிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இதே போன்று திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு தினமும் இரவு 8.25 மணிக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சி மண்டலத்தில் ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 6, 8, 10-ந் தேதிகளில் இரவு 8.25 மணிக்கு பதிலாக இரவு 10.35 மணிக்கு புறப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad