குலசேகரபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு புதிய கட்டிடம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 3 October 2024

குலசேகரபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு புதிய கட்டிடம்.

குலசேகரபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு புதிய கட்டிடம். கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.

அக்.3, தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி வட்டாரம் குலசேகரன்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு கட்டிடம் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கட்டப்பட்டுள்ளது. 

கனிமொழி எம்பி முயற்சியால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் வழிகாட்டுதலோடு மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலோடும், பொது நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ. 1.12 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. 

கலெக்டர் இளம்பகவத், மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் கனிமொழி எம்பி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, மாநில மகளிரணி பிரச்சாரக் குழு செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ஜெசி பொன் ராணி, உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளங்கோ.

குலசை அறங்காவல குழு தலைவர் கண்ணன், உடன்குடி பேரூர் செயலாளரும், பேரூராட்சி துணைத் தலைவருமான சந்தையடியூர் மால் ராஜேஷ், பஞ்சாயத்து துணைத் தலைவர் கணேசன், மாவட்ட சுகாதார அலுவலர் பொற்செல்வன் வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரமின் ,திமுக நிர்வாகிகள் ஜெயபிரகாஷ், அலாவுதீன், ஹரி ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad