அக்.3, தேசபிதா மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. உடன்குடி ஒன்றியம் பரமன்குறிச்சி கிராமம் முந்திரி தோட்டம் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் லங்காபதி தலைமை வகித்தார். கூட்டத்தில்
கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சமூக தீமை நிராகரிப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேலும் ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் கிராம குடிநீர் உட்கட்டமைப்பு பணிகளுக்கு 10 சதவீதம் சமூக பங்களிப்பை வழங்குவதை உறுதி செய்யவேண்டும், 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் தரத்தினை ஆய்வு செய்வது, 15வயதுக்கு மேற்பட்ட எழுத படிக்க தெரியாத அனைவரையும் கண்டறிந்து புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மூலம் 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற பகுதிகளாக மாற்றுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கூட்டத்தில்.மேலும் தோட்டத்தார் விளை கிழக்குப் பகுதியில் பாதசாரிகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு சுகாதார வளாக அமைக்க வேண்டும்.
முந்திரி தோட்டம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் புதிய கால்நடை தொட்டி, மதில் சுவர், புதிய சிமெண்ட் ரோடு உள்ளிட்டவை ஊர் பொதுமக்கள் சார்பில் திமுக மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ் கோரிக்கை வைத்தார். இந்தக் கூட்டத்தில் பஞ்சாயத்து துணைத் தலைவர் முத்துலிங்கம், பஞ்சாயத்து செயல் அலுவலர் சுந்தர் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment