தேசபிதா மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. உடன்குடி ஒன்றியம் செம்மறிக்குளம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் அகஸ்டா மரியதங்கம். தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக உடன்குடி ஒன்றிய குழுதலைவர் பாலசிங் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அதிகாரி ஜெயின், துணைவட்டார வளர்ச்சி அலுவலர் பர்வத ராமலட்சுமி கிராம நிர்வாக அலுவலர் சரவணன், தலைமை ஆசிரியை தனசெல்வி, ஆசிரியர் பயிற்றுனர் ஆதி மற்றும் கவுன்சிலர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சமூக தீமை நிராகரிப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேலும் ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் கிராம குடிநீர் உட்கட்டமைப்பு பணிகளுக்கு 10 சதவீதம் சமூக பங்களிப்பை வழங்குவதை உறுதி செய்யவேண்டும், 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் தரத்தினை ஆய்வு செய்வது, 15வயதுக்கு மேற்பட்ட எழுத படிக்க தெரியாத அனைவரையும் கண்டறிந்து புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மூலம் 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற பகுதிகளாக மாற்றுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment