ஏரலில் காளி பூஜை திருவிழா கொண்டாட்டம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 3 October 2024

ஏரலில் காளி பூஜை திருவிழா கொண்டாட்டம்.

ஏரலில் காளி பூஜை திருவிழா கொண்டாட்டம் 

அக்டோபர் 3, உலக புகழ் பெற்ற குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு பெரும்பாலும் எல்லாம் ஊர்களில் காளி பூஜை திருவிழா வெகு விமிர்சியாக நடைபெறும்.

நேற்று இரவு ஏரல் திருச்செந்தூர் ரோட்டில் அமைந்திருக்கும் பிரம்ம சக்தி அம்மன் தசரா குழு சார்பாக காலை 8 மணி அளவில் பால்குடம் அபிஷேகம் நீர் தாமிரபரணி நதிகறையில் இருந்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு சென்று அபிஷேகம் செய்யப்பட்டது. 

அதன் பிறகு இரவு 12 மணி அளவில் அம்மனுக்கு அலங்காரம் செய்து காளி பூஜை சிறப்பாக நடைபெற்று மாலை போட்ட சாமியார்கள் சாமி ஆடி மஞ்சள் பால் குளித்தனர். 

அதன் பிறகு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கபெற்றது இன்று அக்டோபர் 3 தசரா கொடியேற்றத்துடன் தொடங்க போகிறது காப்பு கெட்டி அனைவரும் விரதம் இருப்பார்கள்


#தூத்துக்குடி மாவட்டம் 
#ஏரல் செய்தியாளர் சேதுபதி ராஜா

No comments:

Post a Comment

Post Top Ad