நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் வினாடி வினா போட்டி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 30 October 2024

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் வினாடி வினா போட்டி.

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் வினாடி வினா போட்டி.


 நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் வினாடி வினா போட்டி
நடைபெற்றது. இந்திய அணுக்கருவியலின் தந்தை ஹோமி ஜஹாங்கீர் பாபா பிறந்த தினமான அக்டோபர் 30-வது தேதியை முன்னிட்டு, மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியின் இயற்பியல் மன்றத்தின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர்கள் சாரா ஞானபாய் மற்றும் சார்லஸ் திரவியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் சாமுவேல், ஹோமி ஜஹாங்கீர் பாபாவின் வாழ்க்கை வரலாறு குறித்து எடுத்துரைத்தார். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் பேசுகையில், ஹோமி ஜஹாங்கீர் பாபா மேற்கொண்ட காஸ்மிக் கதிர்கள் ஆராய்ச்சி குறித்தும், மேசான் என்ற அடிப்படை துகள்கள் குறித்த ஆராய்ச்சி குறித்தும், அவர் நிறுவிய டிராம்பே ஆராய்ச்சி மையம் குறித்தும் விரிவாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். தலைமையாசிரியர் குணசீலராஜ் அணுக்கரு பிளவு, அணுக்கரு இணைவு மற்றும் அணுசக்தி குறித்து விளக்கி கூறினார்.

அதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு அணு மற்றும் அணுக்கரு இயற்பியல் சார்ந்த வினாடி வினா போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகளை பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் சுதாகர், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad