திருச்செந்தூர் அருகே காயாமொழி ராமநாதபுரத்தில் அருள்மிகு கிழக்கத்தியார், சக்தி அம்மன், பேச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி கொடைவிழா நடைபெற்றது. விழாவையொட்டி செவ்வாய் கிழமை மதியம் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து இரவு 10மணிக்கு அலங்கார பூஜை, நள்ளிரவு 12மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று புதன்கிழமை காலை உணவு எடுப்பதுடன் விழா நிறைவு பெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் தஞ்சாவூர் தொழிலதிபர் வி. எஸ். நடராஜன் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment