புரட்டாசி கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி குலசை முத்தாரம்மன் கோவிலில் சுவாமி திருவீதி உலா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 16 October 2024

புரட்டாசி கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி குலசை முத்தாரம்மன் கோவிலில் சுவாமி திருவீதி உலா.

புரட்டாசி கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி குலசை முத்தாரம்மன் கோவிலில் சுவாமி திருவீதி உலா. கணேசன் நாடார் குடும்பம் சார்பில் சிறப்பு வழிபாடு.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலுக்கு தமிழக மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 

இந்த கோயிலில் தசரா திருவிழா கடந்த வாரம் நடைபெற்று முடிந்த நிலையில் புரட்டாசி மாத கடைசி செவ்வாய்க்கிழமை யன்று முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது. 

குலசை பெரிய புரத்தை சேர்ந்த என். எஸ். ஏவி கணேசன் நாடார் குடும்ப த்தினர் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து 50 ஆண்டுகளாக இவர்களின் குடும்பத்தின் சார்பில் புரட்டாசி மாத கடைசி செவ்வாய்க்கிழமை அன்று குலசை முத்தாரம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்படுவது வழக்கம். 

அதன் படி நேற்று நடைபெற்ற சிறப்பு பூஜையில் கணேசன் நாடார் குடும்பத்தினர் உள்பட கலந்து கொண்டனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா.
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad