தூத்துக்குடி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 16 October 2024

தூத்துக்குடி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

தூத்துக்குடி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு நேற்று இரவு ஏற்றப்பட்டது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுநிலை, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரம் இடையே கரையை நோக்கி இன்று முதல் நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மீனவா்களுக்கும், கப்பல்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு நேற்று இரவு ஏற்றப்பட்டது. 

 -தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad