அந்த மனுவில்: ஏரல் பஜாரில் உள்ள வணிக நிறுவனங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி வருவாய் துறையினர் நில அளவீடு செய்து வருகின்றனர். இது ஏரல் பஜார்
வியாபாரிகளுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
ஏனென்றால் கடந்த 2023 டிசம்பர் 17, 18களில் பெய்த கனமழையால் ஏரல் பஜார்
வியாபாரிகளின் வணிக நிறுவனங்கள் நூறு சதவிகிதம் முற்றிலுமாக அழிந்து
விட்டது. எல்லோரும் அறிந்ததே, ஏரல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பெரிய பாலம் உடைந்ததை இன்னும் அரசால் சரி செய்யமுடியால் திணறி கொண்டிருக்கின்ற வேளையில், வணிக நிறுவனங்கள் மட்டும் எப்படி இதிலிருந்து மீண்டு வந்து விட்டதாக நினைத்து
ஆக்கிரமைப்பு அகற்ற முன் வருகிறீர்கள் என தெரியவில்லை.
ஏரல் பஜாரில் இன்சூரன்ஸ் செய்து உள்ள பெரிய நிறுவனங்களுக்கு பாதிப்புக்குரிய முழு நிவராணம் இன்னும் கிடைக்கவில்லை. இன்சூரன்ஸ் இல்லாத சிறிய நிறுவனங்கள் பெட்டிகடை, தேநீர் கடைகள், சிறிய மளிகை கடை,
ஓலைபாய் பெட்டிகடைகள் போன்ற ஏராளமான சிறிய நிறுவனங்கள் மறுவாழ்வுக்கு வழி தெரியாது தவித்து கொண்டிருக்கின்ற இந்த வேளையில், அரசு இதுவரை ஒரு நயா பைசா கூட நிதி உதவி செய்யாத நிலையில் இப்பொழுது ஆக்கிரமைப்பு உள்ளது என இந்த நேரத்தில் வருவது உண்மையில் வெந்த புண்ணில் வேல்
பாய்ச்சுவதற்கு சமமானதுதான் ஆகையால் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்
மனிதாபிமான முறையில் ஆக்கிரமைப்பு அகற்றலை இரண்டு வருடத்திற்கு நிறுத்தி
வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்குமாறு தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பாக பணிவாக கேட்டுக்கொள்கின்றோம். என தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment